இன்டர்நெட் குறிப்புகள்

தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்

ஆன்ட்ராய்ட் தகவல்கள்

ப்ளாக்கர் டிப்ஸ்

எளிய தமிழில் HTML

தமிழில் போட்டோஷாப்

Latest Release

சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிப்பது ஆபத்தானது. கூலிங் வாட்டர் குளிர் நீர் குடிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேர்ந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் பிரிட்ஜில் வைத்த கூலிங் வாட்டர் குடிப்பதை குறைத்து கொள்வது நல்லது. அல்லது தவிர்ப்பது அதைவிட நல்லது. இந்த வீடியோவில் ஐஸ்கட்டி தண்ணீரை பருகுவதால் ஏற்படும் கேட்டை செய்முறை விளக்கமாக காட்டுகிறார் ஆசிரியர் ஒருவர்.

ஐஸ் வாட்டர் குடிக்கறீங்களா?....! ஆபத்து ...! (வீடியோ)

Posted by FB Videos on Sunday, July 5, 2015
தமிழ் மக்கள் பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கணினியை பயன்படுத்தும் அளவிற்கு அதைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளனரா என்றால் கட்டாயம் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஏதாவது பிரச்னை ஏற்படும்போது ஒரு சிலர் மட்டும் கூகிளில் Tamil computer tips அல்லது Computer tips in Tamil என தேடி அதற்கான தீர்வுகளை பெறுகின்றனர். மிக பெரும்பாலானோர் சின்ன சின்ன விடயங்களுக்கும் கூட கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர்களை அணுகி பணத்தை செலவழிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்த 8 விதமான தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் பயன்படும்.


இந்த கட்டுரையில் எனக்குத் தெரிந்த சில தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ்களை தொகுத்து வழங்கியுள்ளேன். படித்து பயன்பெறுங்கள். நிச்சயம் இந்த குறிப்புகள் உங்கள் பணத்தை மிச்சபடுத்தும்.

பொதுவாக கம்ப்யூட்டரில் என்னென்ன பிரச்னை வரும்? அதை கம்ப்யூட்டர் டிப்ஸ் படித்து நாமே சரி செய்ய முடியுமா? எனதான் என்னிடம் பலரும் கேள்விகள் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்.

கண்டிப்பாக முடியும்.

1. முதலில் கம்ப்யூட்டர் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதில் என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். உங்கள் கணினியை பற்றி அறிந்துகொள்ள கம்ப்யூட்டர் என்றால் என்ன? பதிவை அவசியம் வாசிக்கவும். இந்த இடுகையை வாசித்த பிறகு கண்டிப்பாக உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும்.

2. மனிதனுக்கு மூளை எவ்வளவு அவசியமோ அதுபோல அது இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமான Operating System முக்கியம். கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வதுதான் ஆபரேட்டிங் சிஸ்டம். இதைப்பற்றி தெரிந்துகொள்ள கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற இந்த பதிவை வாசிக்கவும். இந்த பதிவில் Computer operating System பற்றி விரிவாக எழுதபட்டுள்ளது.

3. சிலர் என்னிடம் அடிக்கடி புலம்புவது இப்படிதான் இருக்கும். புது கம்ப்யூட்டர் வாங்கி கொஞ்ச நாள் கூட ஆகல.. ரொம்ப ஸ்லோவா இருக்கே சார்.. என்ன செய்யலாம்? என கேட்கின்றனர். அவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். கம்ப்யூட்டரில் நீங்களாகவே செய்ய கூடிய சில விடயங்கள் இருக்கிறது. அவற்றை செய்து முடித்துவிட்டால் கம்ப்யூட்டர் வாங்கிய புதியதில் இயங்கியதை போலவே இயங்கும். அவ்வாறு இயங்க வைக்க "உங்க கம்ப்யூட்டர் ஸ்லோவா? எப்படி சரி செய்யலாம்?" என்ற இடுகையை அவசியம் வாசித்துவிடுங்கள். கட்டாயம் பயனளிக்கும்.

4. இன்று Desktop Computer களை விட Laptop Computer களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதை பராமரித்து அடிக்கடி ரிப்பேர் ஆகாமல் பாதுகாக்க லேப்டாப் கம்ப்யூட்டரை பராமரிப்பது  எப்படி என்ற இந்த இடுகையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ளதை பின்பற்றினால், கட்டாயம் உங்களுடைய லேப்டாப் அடிக்கடி ரிப்பேர் ஆகாது.

5. நினைத்ததை டவுன்லோட் செய்து வைக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. பெரும்பாலும் Unlimited Internet connection வைத்திருப்பவர்கள் தயங்காமல் சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து விடுகின்றனர். ஒரு முறை மட்டும் பயன்படக்கூடிய மென்பொருள்களை கூட டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டு, பிறகு அதை அன்இன்ஸ்டால் செய்யாமல் மறந்து விடுகின்றனர். இதனால் ஹார்ட் டிஸ்க் நிரம்பி கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்கும். இதை தவிர்க்க உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டதா? இதோ தீர்வு! என்ற பதிவினை கட்டாயம் வாசிக்கவும்.

6. ஒரு நண்பர் திடீரென நடு இரவில் போன் செய்து என்னுடைய டெஸ்டாப்பில் உள்ள எந்த ஒரு ஐகானையும் காணோம் என்ன செய்வது என கேட்டார். அவருக்கு அளித்த விளக்கத்தையே திடீரென்ன டெஸ்டாப்பில் ஐகான்கள் மறைந்து விட்டதா? அதற்கான தீர்வு என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்... கட்டாயம் உங்களுக்கு உதவும்.

7. கம்ப்யூட்டர் பாதுகாப்பு மிக மிக அவசியம். இன்டர்நெட் பயன்படுத்தும் நண்பர்கள் கட்டாயம் ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். ஹார்ட் டிஸ்க்கில் ஏதேனும் பிரச்னை என்றால் அதை சரி செய்வதற்கும் மென்பொருள் உண்டு. இதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள "Hard Disk பிரச்னையை சரி செய்யும் மென்பொருள்" என்ற இடுகையை வாசிக்கவும்.

8. பல புரோகிராம்களை பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க, Computer -ஐ Shutdown செய்தால் அது ஷட்டவுன் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடனே உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக இந்த பதிவை வாசிக்கவும்.

மேலும் "தங்கம்பழனி வலைத்தளத்தில்" தேவையான Tamil computer Tips and Tricks கள் நிறைய உள்ளன. படித்துப் பயன்பெறுங்கள்.

Tags: #Tamil Computer Tips, Computer tips in tamil, computer tips tamil.
கிராம புறங்களில் காடு கரை எங்கும் வளர்ந்து கிடப்பவை நாயுருவி. அது வளர்ந்திருக்கும் பாதையில் நடந்து செல்லும்போது ஆடைகளில் அதன் விதைகள் ஒட்டிக்கொள்ளும். சாதாரணமாக கிடைக்கும் நாயுருவியின் மருத்துவ குணங்கள் அபரிதமானவை.

நாயுருவியின் வகைகள்: 


நாயுருவி இரண்டு வகைகளில் உள்ளது. 

1. ஆண் நாயுருவி. இது பச்சை நிறத்தில் காணப்படும். 
2. பெண் நாயுருவி. இதற்கு செந்நாயுருவி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டும் இலைகளும் சிவப்பு நிறத்தில் காணப்படும். 

naayuruvi

தோல் நோயை போக்கும் நாயுருவி: 


தேமல், படை போன்ற தோல் நோய்களுக்கு நாயுருவியின் இலை மருந்தாக பயன்படுகிறது. நாயுருவியின் இலையை கசக்கி சாறெடுத்து தேமல் உள்ள இடங்களில் பூசி வர விரைவில் குணமடையும். 

தேள் கடி விஷம் இறங்க நாயுருவி: 


சமலையலுக்கு பயன்படும் உப்புடன், நாயுருவியின் இலையை சேர்த்து கசக்கி. தேள் கடித்த இடத்தில் தடவினால் தேள்கடி விஷம் இறங்கிவிடும். 

பெண்களின் மாத விலக்கு பிரச்னை தீர


பெண்களின் மாத விலக்கு பிரச்னை தீர இந்த செடியினை எரித்து 5 கிராம் சாம்பல் எடுத்து தேனில் கலந்து பருகி வர மாதவிலக்காகும். 

பெண்களின் கருச்சிதைவுக்கு பிறகு ஏற்படும் இரத்த போக்கினை நிறுத்த நாயுருவியின் வேர் பட்டை மற்றும் சாறு  பயன்படுகிறது. 

சிறுநீரக கோளாறுகளை போக்கும் நாயுருவி


சிறுநீர் போக்கினை தூண்டுவதற்கு நாயுருவி தாவரத்தை கசாயம் பயன்படுகிறது. 

சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு நீக்கி குணமடையச் செய்கிறது. மேலும் சில 
சிறுநீரக கோளாறுகளை நீக்குவதற்கு நாயுருவி பயன்படுகிறது.

முகத்தை வசிகரிக்கும் செந்நாயுருவி


செந் நாயுருவி செடியின் வேரை எடுத்து பல் துலக்கி வந்தால் முகம் வசீகரமாகும். 

காதில் சீழ்வடிதல் போக்கும் செந்நாயுருவி


காதில் சீழ் வடிதல் நிற்க செந்நாயுருவியின் இலைகளை இடித்து சாறெடுத்து காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் சீழ் வடிதல் நிற்கும். 

இரத்த மூலம் போக்கும் நாயுருவி


இதன் இலைகளை அரைத்து, நெல்லிக் காய் அளவிற்கு எடுத்து எருமை தயிருடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். 

நாயுருவியின் விந்தைகள் 

நாயுருவியைப் பற்றிய ஒரு சுவராசிய தகவலும் உண்டு. இதன் துளிர்களை எடுத்து கசக்கி நடு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டால் எதிரிகளும் வணங்குவர் என மந்திர பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

மந்திர பாடல்: 

ஓம் எழுவானை படுவான் நாயுருவி
ஏனானை முகத்து நாயுருவி புலி போல்
முனங்கி நாகம் போல் சீறி மான் போல்
வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி
சிவாகா.
அது மட்டுமல்லாமல், இதன் விதைகளை எடுத்து சோறு போல சமைத்து சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு பசியே எடுக்காது. மீண்டும் பசி எடுக்க வேண்டுமென்றால்  மிளகு, சீரகத்தை வறுத்து குடிநீராக காய்ச்சி அருந்து வர பசி  உணர்வு ஏற்படும். 

குறிப்பு: மேற்குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்க பெரும்பாலும் செந்நாயுருவியின் இலைகள், வேர்கள், பட்டைகளே பயன்படுத்தப் படுகின்றன. சில நேரங்களில் செந்நாயுருவி கிடைக்காத பட்சத்தில் ஆண் நாயுருவியின் பாகங்கள் பயன்படுத்தபடுகிறது. 
கடந்த வாரத்தில் பேஸ்புக் மூலம் பரவிய வைரஸ் லிங்கால், நண்பர்கள் பலரது டைம் லைனிலும் ஆபாச புகைபடங்கள் பதியப்பட்டது. அந்த அசிங்கமான புகைப்படங்கள் நண்பர்ளுக்கு தானாகவே Tag ம் செய்யப்பட்டது. ஒரு சிலருக்கோ அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அனுப்புவது போல, Inbox -ல் இது மிக அவசரம்.. இது உங்களுக்கான வீடியோ என ஒரு வைரஸ் லிங்க் தானாகவே அனுப்பட்டது.

நண்பர்கள்தான் அனுப்பியிருக்கிறார்கள் என நம்பி அதை கிளிக் செய்தவர்களின் நிலமை பரிதாபமாகிவிட்டது. காரணம் அவர் கிளிக் செய்தவுடன் அந்த வைரஸ் லிங்கானது, அவரது டைம் லைனில் ஆபாச புகைப்படங்கள் அடங்கிய போஸ்ட்டை பதிய ஆரம்பித்தது.

இதுபோன்று நீங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக இணையதளங்களின் ஊடே சாட் செய்து கொண்டிருக்கும்போது உங்களுக்கு Inbox ல் வரும் லிங்க்குகளை சோதிக்காமல் கிளிக் செய்து வைரஸ் தாக்குதல்களுக்கு  ஆளாக வேண்டாம்.


மேலும் பேஸ்புக்கில் ஆண்கள் மட்டட்டுமல்லாது, பெண்களும் நட்பு வட்டத்தில் இருப்பர். வயது வித்தியாசமில்லாமல் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் அந்த தீங்கான லிங்கானது சென்றுவிடும். எனவேதான் அந்த மோசமான இணைப்புகளை கிளிக் செய்ய கூடாது. இதுபோன்ற வைரஸ் அடங்கிய Link களை சோதித்தறிவு கட்டாயம் ஆகும்.
viruses, malware, phishing scams, and trojans

வைரஸ் உள்ள லிங்கை கண்டறிவது எப்படி? 


உங்களுக்கு அனுப்பட்ட லிங்க் வைரஸ் அடங்கியுள்ளதா என கண்டறிய "ஆன்லைன் லிங்க் ஸ்கேன்" என்ற டூல் உள்ளது.

ONLINE LINK SCAN என்ற இந்த டூலின் மூலம் viruses, malware, phishing scams, மற்றும் trojans போன்றவைகளின் பாதிப்பு உள்ளதா என நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்யாமலே கண்டறிய முடியும். 

உங்களுக்கு அனுப்பட்ட லிங்க்-ஐ காப்பி செய்து கொண்டு, ONLINELINKSCAN என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

அதில் உள்ள பெட்டியில் காப்பி செய்த இணைப்பை பேஸ்ட் செய்து SCAN LINK என்ற பொத்தானை அழுத்தவும். 

உடனே அந்த இணைப்பில் ஏதேனும் வைரஸ் போன்ற பிரச்னைகள் உள்ளதா என கண்டறிந்து, அதற்கான LINK SCAN SUMMARY -ல் காட்டும். 

எனக்கு பேஸ்புக் இன்பாக்சில் அனுப்பபட்ட லிங்கின் Screen Shot இது. 

அதில் உள்ள இணைப்பை சோதிக்க நான் லிங்க் ஸ்கேன் தளத்தில் சோதனை செய்து பெறப்பட்ட முடிவுகள் கீழே: 

link scan summary

இவ்வாறு உங்களுக்கு அனுப்பட்ட லிங்க் பாதுகாப்பானதுதானா என கண்டறிந்த பிறகு, அதை கிளிக் செய்து பார்வையிடுவது நல்லது. 

Tags: Online Scan, LInk SCAn, ONline link SCan, Prevent Phishing link, find virus link, online virus link scan, virus link scanner, online malware link scanner, Link scan summary, prevent data theft link online. 
இணையத்தில் இலவசமாக கோப்புகளை சேமித்திட பல வழிகள் உள்ளன. கூகிள் ட்ரைவ், ட்ராப்பாக்ஸ் மற்றும் ஜஸ்ட் குலூட் போன்ற இணைய வழி சேமிப்பகங்கள் மூலம் மிக முக்கியமான கோப்புகளை அதில் சேமித்து வைக்கலாம்.

online file storage just cloud

இணைய வழி சேமிப்பகங்கள்: 

இணையத்தின் வழியாக சேமிக்கும் வசதிகளை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. குறிப்பாக கூகிள் நிறுவனம் கூகிள் ட்ரைவ் என்ற சேமிப்பக வசதியை வழங்குகிறது. ட்ராப்பாக்ஸ் என்ற நிறுவனமும் கோப்புகளை சேமிக்க தனது சர்வரல் இலவச வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

ஜஸ்ட் குலூட் - JUST CLOUD என்ற இணையதளம் மேற்குறிப்பிட்ட சேமிப்பகங்களைப் போன்றதே. இதில் குறிப்பிட்ட அளவு வரைக்கும் கோப்புகளை இலவசமாக சேமிக்க முடியும். 


இணைய வழி சேமிப்பகங்கள் மூலம் கோப்புகளை ஏன் சேமிக்க வேண்டும்? 

திடீரென உங்களது கம்ப்யூட்டர் செயலிழக்கும்போது, அதில் உள்ள கோப்புகள் அழிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவேதான் கம்ப்யூட்டர் அல்லாத வேறு சேமிப்பகத்தில் கோப்புகளை சேமித்திட வேண்டும். 

இணைய சேமிப்பகத்தின் பயன்: 

இணைய சேமிப்பகங்கள் மூலம் கோப்புகளை சேமிக்கும்போது, எந்நிலையிலும், எந்த இடத்திலிருந்தும், அவற்றை எடுத்துப் பயன்படுத்த முடியும். 

இணைய சேமிப்பகம் JUST CLOUD செல்ல சுட்டி: 

 http://www.justcloud.com
 http://www.drive.google.com
ஆங்கிலம் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். சிலர் எடுக்கும் முயற்சிகள் பாதியிலேயே நின்று விடுகிறது. ஒரு சிலர் கடின முயற்சிகளை மேற்கொண்டு ஆங்கிலத்தை கற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு கற்றுக்கொள்கிறவர்களுக்கு கூட "உச்சரிப்பு" பிரச்னை அதிகம் இருக்கும். சரியான உச்சரிப்புடன் கூடிய கற்றல்தான் ஒரு  மொழியை முழுமையாக கற்றுக்கொண்டதற்கான தகுதியை அடைய வழிவகுக்கும்.
free natural english reader software

ஆங்கில உச்சரிப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு சரியான உச்சரிப்புகளுடன் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் உள்ளது. 

இந்த மென்பொருள் நீங்கள் பேச வேண்டிய ஆங்கில செய்திகளை, தகவல்களை, உரையாடல்களை காப்பி செய்து பெட்டியில் உள்ளிட்டு Play பட்டனை அழுத்தும்போது அதிலுள்ள ஆங்கிலத்தை படிக்க ஆரம்பிக்கிறது. 

நிறுத்தல் குறி, கமா மற்றும் இன்ன பிற குறிகளுடன் அமைந்த எழுத்துகளை (டெக்ஸ்ட்டை) அழகாக நிறுத்தி படிக்கிறது. 

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சம், ஆண் மற்றும் பெண் குரல்களில் வாசிக்கும் வசதியாகும். 

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: (கீழுள்ள இணைப்பை காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்தவும்)

http://www.naturalreaders.com/download.php

ஆங்கிலத்தில்; 


Free NaturalReader 13

Main feature
  • Full functional text to speech with free voices
  • Open Word, PDF and other documents
  • Floating bar to read any text in other applications
  • Change speed and speaker
  • It is Free to use and free to download.